மதுரையில் குவிந்த மக்கள் பொருட்கள் கிடைக்காமல் விற்று தீர்ந்த அவலநிலை
" alt="" aria-hidden="true" />
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்
26 - 4 - 2020 முதல்
29 - 4 - 2020 ஆகிய நான்கு நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவு என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பை வெளியிட்டார். இதனையடுத்து அத்தியாவசிய பொருட்கள் வாங்க பொதுமக்கள் காலையிலேயே காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் வாங்க குவிந்தன. காலை நேரத்திலேயே பல இடங்களில் காய்கறிகள் உள்ளிட்ட பொருள்கள் கிடைக்கவில்லை. இதனால் பொதுமக்கள் அங்குமிங்குமாக பல இடங்களில் அலைந்து வாங்குவதற்கு முயற்சி மேற்கொண்டனர். காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. இன்று தற்காலிக காய்கறி மார்க்கெட் மதுரை கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்தது. அங்கும் காய்கறிகள் முழுமையாக விற்று தீர்ந்தன. மேலும் அசைவப் பிரியர்கள் ஆட்டுக்கறி கோழிகறி மற்றும் மீன்களை அதிக விலைக்கு விற்பனை செய்த போதும் மக்கள் விலையையும் பொருட்படுத்தாமல் வாங்கி சென்றனர். ஏழை எளிய நடுத்தர மக்கள் கொரோனா தொற்று ஊரடங்கு உத்தரவால் வேலைகளுக்குச் செல்ல முடியாத நிலையில் காய்கறிகள் மளிகை பொருட்கள் மற்றும் அசைவ பொருட்களை அதிக விலைக்கு விற்பதால் பொருட்கள் வாங்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் விலை அதிகமாக விற்கும் காய்கறி மற்றும் மளிகை கடைகளை அரசு அதிகாரிகள் கண்காணித்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏழை எளிய மக்கள் மண குமுறல் உடன் தெரிவித்துள்ளனர். நடுத்தரம் மற்றும் ஏழை எளிய மக்களின் துயரத்தை போக்க எந்த அரசும் முன்வரவில்லை என கண்ணீர் மல்க தெரிவித்தனர்.