" alt="" aria-hidden="true" />
வாணியம்பாடி அருகே ரூ.1 கோடியே 29 லட்சம் மதிப்பில் புதிய தார் சாலை பணிகளை அமைச்சர் நிலோபர்கபீல் தொடங்கி வைத்தார்.
வாணியம்பாடி திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஆலங்காயம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய தார் சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் ஆலங்காயம் ஏரிக்கரையிலிருந்து ராஜபாளையம் பகுதி வரையில் டியூரிப் 2019-20 திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணியும் மற்றும் 14வது நிதிகுழு மூலம் ரூ.79 லட்சம் மதிப்பீட்டில் ராஜாபாளையம் முதல் வாணியம்பாடி-ஆலங்காயம் சாலை வரை தார்சாலை அமைக்கும் பணியை தொடங்க பூமிபூஜை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஆலங்காயம் பேரூராட்சி அதிமுக செயலாளர் டி.பாண்டியன் தலைமை தாங்கினார். முன்னாள் பேருராட்சி மன்றத் தலைவர் மஞ்சுளாகந்தன், முன்னாள் கவுன்சிலர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் திட்டப்பணிகளை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர்கபீல் தொடங்கி வைத்தார். விழாவில் முன்னாள் எம்எல்ஏ கோவி.சம்பத்குமார் உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.